ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் தான் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு அச்சாரம் என்றும், இந்த கூட்டணிகள் மீண்டும் அப்படியே தொடர அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தமிழக அரசியல் வட்டாரத்தில் கருத்து நிலவி வருகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அரசியல் களம் தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு இணையாக மற்ற பிரதான கட்சிகளும் ஈரோடு கிழக்கு தொகுதிகளில் குவிந்து தங்கள் பலத்தை நிரூபிக்க கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
நாடாளுமன்ற கூட்டணி : இது ஒருபுறம் இருக்க, இந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்தான் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு அச்சாரம் என்கிறது அரசியல் வட்டாரம். அதன்படி தான் தற்போது கூட்டணியும் அமைந்துள்ளதோ என்கிற ஒரு பார்வையும் தமிழக அரசியலில் எழுகிறது.
பிரதான கட்சிகள் : குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், இந்த இடைத்தேர்தலில் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியே நிற்கவில்லை. மாறாக தங்களது கூட்டணியை தற்போதும் தொடர்கின்றனர்.
திமுக கூட்டணி : திமுக வழக்கம்போல காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டு வருகிறது. மேலும், இந்த கூட்டணியில் தற்போது புதியதாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியும் இணைந்துள்ளது. ஆதலால் நாடாளுமன்ற தேர்தலும் இந்த நிலையே தொடரும் என்ற கருத்து அரசியல் வட்டாரத்தில் நிலவி வருகிறது.
அதிமுக – பாஜக : அதேபோல, அதிமுகவும் இந்த இடைத்தேர்தலில் பாஜக ஆதரவுடன் எதிர்கொள்கிறது. அதிமுகவோ, பாஜகவோ தனித்து போட்டியிடும் என எதிர்பார்த்த நிலையில், பாஜக 2024 தேர்தலை மனதில் வைத்து அதிமுகவுக்கு ஆதரவு என இந்த இடைத்தேர்தலை தேர்தலை எதிர்கொள்கிறது என பேசப்படுகிறது.
அமமுக : அடுத்து, டிடிவி தினகரனின் அமமுக கட்சியினர் தனித்து நிற்பதாக கூறி, பின்னர் தாங்களுக்கான குக்கர் சின்னம் கிடைக்கவில்லை. 2024 தேர்தலின் போது பொதுவான சின்னம் கிடைக்க வேண்டும் என்று இந்த தேர்தலில் விலகுவதாகவும் அறிவித்து விட்டனர். ஆகவே 2024 நாடாளுமன்ற தேர்தலில் அமமுக தனித்து போட்டியிடும் என்ற நிலை இருந்தாலும், அப்போது உள்ள சிறு கட்சிகளோடு கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியும் திமுக, திமுகவோடு அமமுக கூட்டணி அமைக்காது என்பது உறுதி.
பாமக – தேமுதிக : அடுத்ததாக, சீமானின் நாம் தமிழர் கட்சி. ஆரம்பித்த நாள் முதல் தற்போது வரை தனித்து நின்று போட்டியிடுகிறார்கள். அதேபோல் 2024 தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்து நின்று தான் போட்டியிடும் என்பது தற்போதே கூறி விடலாம். மற்றபடி பாட்டாளி மக்கள் கட்சி, விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிடர் கழக கட்சி ஆகியவை அந்தந்த சமயத்தில் தங்களது முடிவை அறிவிப்பார்கள் என்று அரசியல் வட்டாரம் கூறுகிறது.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…