கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை காரணமாக மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ கல்லூரிகள் தவிர்த்து அனைத்து கல்வி நிறுவனங்களும் மார்ச் 31ஆம் தேதி வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ள தகவலில், சென்னையில் சுமார் 3800 ஏடிஎம் மையங்களை சுத்தம் செய்ய உத்தரவிட்டு உள்ளதாக கூறியுள்ளார்.
இதையடுத்து சென்னையில் ஒரு மருத்துவ குழு தினந்தோறும் 80 வீடுகளை கண்காணிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் பூங்காக்கள் மூடப்படும் என்றும் சென்னை மாநகராட்சியை தொடர்பு கொள்ள 1913 என்ற எண்ணை அழைக்கவும் அறிவுறுத்தியுள்ளார். அத்துடன் சென்னையிலுள்ள 2500 தனியார் மருத்துவமனைகளின் நிர்வாகத்திடம் தடுப்பு நடவடிக்கை குறித்து பேசி இருப்பதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து தி.நகரில் உள்ள பெரிய கடைகளை மூட உத்தரவிட்டுள்ளதாகவும் சிறிய கடைகள் திறந்து இருக்கும் என்றும், மக்கள் வீட்டைவிட்டு செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மதுரை : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல், ஈரோடு கிழக்கு மற்றும் உ.பியில் மில்கிபூர்…
ஈரோடு : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர்…
டெல்லி : 70 சட்டப்பேரவைகள் கொண்ட டெல்லி மாநிலத்திற்க்கு கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு…
சென்னை : கடந்த சில நாட்களாக தொடர் உச்சம் கண்டு வந்த தங்கத்தின் விலை நேற்று எந்தவித மாற்றமும் இன்றி…
ஜார்க்கண்ட் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு மிகவும் பிடித்த எண் 7. அவரது…
ஈரோடு : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்ற ஈரோடு கிழக்கு தேர்தலுக்கான முடிவுகள் இன்று காலை 7 மணி…