கொரோனா அச்சத்தால் தி.நகரில் பெரிய கடைகளை மூட மாநகராட்சி உத்தரவு.!

Default Image

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை காரணமாக மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ கல்லூரிகள் தவிர்த்து அனைத்து கல்வி நிறுவனங்களும் மார்ச் 31ஆம் தேதி வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ள தகவலில், சென்னையில் சுமார் 3800 ஏடிஎம் மையங்களை சுத்தம் செய்ய உத்தரவிட்டு உள்ளதாக கூறியுள்ளார்.

இதையடுத்து சென்னையில் ஒரு மருத்துவ குழு தினந்தோறும் 80 வீடுகளை கண்காணிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் பூங்காக்கள் மூடப்படும் என்றும் சென்னை மாநகராட்சியை தொடர்பு கொள்ள 1913 என்ற எண்ணை அழைக்கவும் அறிவுறுத்தியுள்ளார். அத்துடன் சென்னையிலுள்ள 2500 தனியார் மருத்துவமனைகளின் நிர்வாகத்திடம் தடுப்பு நடவடிக்கை குறித்து பேசி இருப்பதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து தி.நகரில் உள்ள பெரிய கடைகளை மூட உத்தரவிட்டுள்ளதாகவும் சிறிய கடைகள் திறந்து இருக்கும் என்றும், மக்கள் வீட்டைவிட்டு செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live dharmendra pradhan
Minister Palanivel Thiyagarajan - BJP State president Annamalai
DMK MPs iniviting various state CMs
Jio - Starlink
hardik pandya virat kohli and rohit sharma
Malavika Mohanan sad
dharmendra pradhan Anbil Mahesh Poyyamozhi