தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வரும் சூழலில், கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கூறப்பட்டது.
அதே போல நேற்று இரவு முதலே சென்னை , காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு என பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதன் காரணமாக சென்னை மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனை வெளியேற்றும் வேலையில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மழை தீவிரம்.. 14 மாவட்ட ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை கொடுத்த மாநில பேரிடர் மேலாண்மைத்துறை!
சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.
அதில், சென்னையில் மாம்பழம் பகுதியில் இருந்து வரும் மழைநீர், அடையாறு வழியாக வங்காள விரிகுடாவிற்கு செல்லும். ஆனால், அடையாறு ஆற்றுக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறந்துவிடப்படுவதன் காரணமாக மழைநீர் அதிகமாக வந்து தேங்கும் நிலை உருவாகி உள்ளது.
தற்போது அதிகாரிகளிடம் கூறி செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீரை தற்போது திறந்து விட வேண்டாம் என கூறியுள்ளோம். அதன் காரணமாக தி-நகர் பகுதியில் மிக விரைவாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இப்போதைக்கு ரங்கராஜபுரம் பகுதி சுரங்கப்பாதை மட்டுமே நீரில் மூழ்கியுள்ளது.
மாநில அரசு மழைநீர் வடிகால் பணிக்கு நிறைய நிதி ஒதுக்கியுள்ளார்கள். அதனால், பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் பெருமளவில் நிறைவு பெற்று மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மழை பெய்தால் சென்னையில் தண்ணீர் தேங்குவது உண்மை தான். அதே போல தற்போது விரைவாக வெளியேற்றபடுவதும் உண்மை. 2 அமைச்சர்கள் களத்தில் இருந்து வேலை செய்து வருகின்றனர். சென்னை மெட்ரோ மழைநீர் வடிகால் இயந்திரங்கள் 24 மணிநேரமும் இயங்கி வருகிறது எனவும் மாநகராட்சி அதிகாரிகள் செய்தியாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…