சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் இருக்கும் அனைத்து திருமண மண்டபங்களையும் மாநகராட்சியிடம் ஒப்படைக்குமாறு மண்டப உரிமையாளர்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ் வழங்கியுள்ளது
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அங்கு கடந்த வாரத்தில் மட்டும் இரு மடங்கிற்கும் அதிகமாக கொரோனா தொற்று பரவியுள்ளது. இதனால் அங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னையில் ஏற்கனவே கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனைகளில் கொரோனா வார்டு நிரம்பியதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தன. இதனை அடுத்து சென்னை மாநகராட்சியில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளில் கொரோனா வார்டுகளை அமைக்க பள்ளிகளை மாநகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டிருந்தது.
இதனை தொடர்ந்து, தற்போது சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் இருக்கும் அனைத்து திருமண மண்டபங்களையும் மாநகராட்சியிடம் ஒப்படைக்குமாறு மண்டப உரிமையாளர்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ் வழங்கியுள்ளது. அந்த மண்டபத்தில் கொரோனா பணிகளுக்கான சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட உள்ளன.
டெல்லி : இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் (ISRO) 100வது ராக்கெட் பணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இஸ்ரோ சமீபத்தில்…
அமெரிக்கா : கிராமி விருதுகள் இசை உலகில் மிகவும் மதிப்புமிக்க விருது விழாக்களில் ஒன்றாகும். இந்த கிராமி விருது நிகழ்ச்சி…
மும்பை : நேற்று இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி விளையாடிய 5வது டி20 போட்டியானது, மும்பை…
சென்னை : சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர் உச்சம் கண்டு வந்த தங்கம் விலை, இன்று சற்று ஆறுதல்…
சென்னை : இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா எனும் சி.என்.அண்ணாதுரை அவர்களின் 56வது நினைவு தினத்தை முன்னிட்டு…
மதுரை : இந்து கடவுள் முருகனின் அறுபடைவீடுகளில் முதல் வீடாக பார்க்கப்படுவது மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் கோயில்.…