இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது … – ஈபிஎஸ் அறிக்கை!

EPS , ADMK

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னையில் உள்ள ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் வரும் ஜூலை-10ம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலை குறித்து அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.  ஏற்கனவே இந்த இடைத்தேர்தலுக்காக வேட்பாளர்களை திமுக, நதாக, பாமக கட்சிகள் அறிவித்திருந்த நிலையில் அதிமுகவின் வேட்பாளர் யார் என்று எதிர்ப்பார்ப்பு இருந்து வந்தது.

தற்போது, விக்ரவாண்டியில் நடைபெற உள்ள இந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் இருந்து யாரும் போட்டியிட போவதில்லை என்றும், அதிமுக இந்த தேர்தலை புறக்கணிக்கிறது என்றும் முடிவெடுத்து உள்ளனர். இது குறித்து 3 பக்க அறிக்கை ஒன்றை எடப்பாடி பழனிசாமி அவர்கள், அதிமுக X தளத்தில் வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், திமுகவை சாடியும், இந்த இடைத்தேர்தலை குறித்தும் பேசி இருந்தார்.

அவர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை குறித்து பேசியபோது, “விடியா அரசின் அமைச்சர்களும், திமுகவினரும் ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதோடு, பணபலம், படைபலத்துடன் பல்வேறு அராஜகங்கள் மற்றும் வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவார்கள் என்பதாலும், மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடமாட்டார்கள் என்பதாலும், தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது என்பதாலும், 10.7.2024 அன்று நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்திருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்