தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோன பாதிப்பு உறுதி!
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோன பாதிப்பு உறுதி.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில், இதுவரை தமிழகத்தில், இந்த கொரோனா வைரஸால் 52,334 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 625 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், கொரோனா அறிகுறியுடன், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. இரு தினங்களுக்கு முன்பு தனக்கு எந்த உடல் நலக்குறைவும் இல்லை ; கொரோனா தொற்றும் இல்லை என உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்திருந்த நிலையில், அன்பழகனுக்கு இன்று கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.