சீனாவை கொன்று குடித்து வரும் கொரோனா..தமிழகத்திலும் நுழைந்தது..6 பேர் அனுமதி
- சீனாவை சீரழித்து கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் பரவியது.
- கொரோனா அறிகுறியோடு 6 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொதுசுகாதாரத்துறை இயக்குநர் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.
அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் சீனாவும் ஒன்று அத்தகைய அதிக மக்களை கொண்ட ஒரு நாட்டில் நுழைந்த கொடூர கொரோனா வைரஸ் அந்நாட்டை வாட்டி வதைத்து வருகிறது.இது படிப்படியாக உலக நாடுகளிலும் பரவி வருவது தான் அதிர்ச்சி செய்தியாக உள்ளது.உலக சுகாதாரதுறைக்கே இந்த வைரஸ் சவால் விடும் வகையில் அசுர வேகத்தில் பரவி வருகிறது.இந்த வைரஸை தடுக்க நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்ற அதே வேளையில் சீனாவில் இதன் பாதிப்பு சற்று அதிகமாகவே உள்ளது.அங்கு இந்நோய் பாதிப்பு மட்டும் 230 சீனர்கள் உயிரிழந்துள்ளனர்.இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.மேலும் இந்நோய் காரணமாக சீனாவும் கடும் உளைச்சலை சந்தித்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்திலும் கொரோனா நுழைந்து விட்டது. கொரோனா அறிகுறியுடன் ஒரு சீனர் உட்பட 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி திருவண்ணாமலை மற்றும் திருச்சி, ராமநாதபுரம் ஆகிய மருத்துவமனைகளில் இந்த அறிகுறியோடு 3 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட 3 பேரில் ஒருவர் சீனர் என்பது குறிப்பிடத்தக்கது அவருக்கும் கொரோனா அறிகுறி இருப்பதாக பொதுசுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.