தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசால் முடுக்கி விடப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் கொரோனா அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். அவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரசால் 38 பேர் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ராஜாக்கமங்கலம் துறை என்ற கிராமத்தைச் சேர்ந்த முதியவர், கேரளாவில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுவந்தார்.பின், அங்கிருந்து வந்தபின்னர் காய்ச்சல், இருமல் ஏற்பட்டதால் கன்னியாகுமரி அரசு மருத்துவமனையின் சந்தேகத்தின் பேரில் அவருக்கு கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இதுவரை உறுதி செய்யப்படவில்லை. என்றாலும், அவரது ரத்தம் மற்றும் சளிஆகியவை பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை முடிவுகள் வந்தபிறகே, அவரது இறப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும். ஏற்கனவே, கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் 2 பேர் உயிரிழந்த நிலையில்,தற்போது மூன்றாவது ஒரு உயிரிழப்பு இன்று ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…
துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…
ஈரோடு : கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக,…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு கட்சி நாடாளுமன்ற குழு தலைவரும் பட்ஜெட்…