கொரோனா வைரஸ் பரவி வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிதுள்ளது.
உலகம் முழுவதும் தனது கொடூரத்தால் அச்சுருத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பொது மக்களை பாதுகாக்க பல்வேறு வழிமுறைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் நிலையில் கொரோனா தொடர்பான மருத்துவ அறிவுறுத்தல்களை பள்ளி செல்லக்கூடிய குழந்தைகள் பின்பற்ற முடியாது என்பதால் தமிழகம் முழுவதும் உள்ள நர்சரி முதல் உயர்நிலை பள்ளி வரை விடுமுறை அறிவிக்கும் படி உத்தரவிடக் கோரி ராஜவேலு என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனுவாக தாக்கல் செய்தார்.
மேலும் அவர் இந்த மனுவில் கொரோனா குழந்தைகள் மற்றும் வயதானவர்களை தான் எளிதில் தாக்குகிறது எனவே குழந்தைகளை பாதுகாக்க தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று அரசுக்கு மனு அனுப்பியும் , எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக பக்கத்து மாநிலங்களான கர்நாடகா மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும் 2019-20ம் கல்வியாண்டானது முடிவடைய உள்ளதால், விடுமுறை அறிவிப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த மனுவை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.வழக்கு தொடர்பாக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விழிப்புணர்வு குறித்த சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டு உள்ளன. இதுவரையில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி என்று ஏதும் இல்லை என்று கூறிய அவரின் வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது அதனோடு இதுகுறித்து தமிழக அரசுக்கு உத்தரவிடவும் முடியாது என்று உத்தரவிட்டனர். கொரோனா வைரஸ் பொதுமக்கள் மத்தியில் பரவாமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தீவிரமாக எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள் இவ்வழக்கை முடித்து வைத்தனர்.
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…