கொல்ல துடிக்கும் கொரோனா..பள்ளிகளுக்கு விடுமுறை வழக்கு.?? உயர்நீதிமன்றம் உத்தரவு

Default Image

கொரோனா வைரஸ் பரவி வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிதுள்ளது.

Image result for பள்ளி குழந்தைகள்

உலகம் முழுவதும் தனது கொடூரத்தால் அச்சுருத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பொது மக்களை பாதுகாக்க பல்வேறு வழிமுறைகளை மத்திய மற்றும்  மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் நிலையில் கொரோனா தொடர்பான மருத்துவ அறிவுறுத்தல்களை பள்ளி செல்லக்கூடிய குழந்தைகள் பின்பற்ற முடியாது என்பதால் தமிழகம் முழுவதும் உள்ள நர்சரி முதல் உயர்நிலை பள்ளி வரை விடுமுறை அறிவிக்கும் படி உத்தரவிடக் கோரி ராஜவேலு என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனுவாக  தாக்கல் செய்தார்.

Image result for கொரொனோ

மேலும் அவர் இந்த மனுவில் கொரோனா குழந்தைகள் மற்றும் வயதானவர்களை தான் எளிதில் தாக்குகிறது எனவே குழந்தைகளை பாதுகாக்க தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று அரசுக்கு மனு அனுப்பியும் , எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக பக்கத்து மாநிலங்களான கர்நாடகா மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை  அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும் 2019-20ம் கல்வியாண்டானது முடிவடைய உள்ளதால், விடுமுறை அறிவிப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று  தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

Image result for CHENNAI HC

இந்நிலையில் இந்த மனுவை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.வழக்கு தொடர்பாக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விழிப்புணர்வு குறித்த சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டு உள்ளன. இதுவரையில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி என்று ஏதும் இல்லை  என்று கூறிய அவரின் வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது அதனோடு இதுகுறித்து தமிழக அரசுக்கு உத்தரவிடவும் முடியாது என்று  உத்தரவிட்டனர். கொரோனா வைரஸ் பொதுமக்கள் மத்தியில்  பரவாமல் இருக்க தேவையான அனைத்து  நடவடிக்கைகளையும்  தீவிரமாக எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள் இவ்வழக்கை முடித்து வைத்தனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்