இயல்பு நிலைக்கு திரும்பியது தமிழகம்..!பேருந்துகள் இயக்கம்
மக்க்ள் ஊரடங்கு இன்று காலை 5 மணியோடு முடிவடைந்ததை அடுத்து தமிழகம் தனது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
தமிழகத்தில் மக்கள் ஊரடங்கு இன்று காலை 5 மணியுடன் முடிந்ததை தொடர்ந்து அரசு பேருந்துகள் ஓடத் தொடங்கின.இருந்த போதிலும் சென்னையில் முக்கிய இடங்களுக்கு குறைந்த அளவில் மட்டுமே பேருந்துகள் தற்போது இயங்கப்படுகிறது.மேலும் மதுரை போன்ற பிற மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.