கொரோனா வைரஸ் விவகாரம்… தமிழகத்தில் பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை அறிவிப்பு…
- தமிழகத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி இல்லை என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
- மேலும் வதந்திகளை நம்பவேண்டாம் எனவும் கருத்து,
பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் தமிழகம் வந்த 3,223 பயணிகள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். சீனாவில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர்களில் சென்னையில் 10 பேர், திருச்சி, ராமநாதபுரத்தில் தலா ஒருவர் என மொத்தம் 12 பேர் மருத்துவ கண்காணிப்பில் தற்போது வைக்கப்பட்டனர். இந்த கொரோனா வைரஸ் குறித்து தமிழக சுகாதார அதிகாரிகள், மேனிலை கல்வி, பள்ளி கல்வி, சமூக நலன் ஆகியவற்றின் செயலாளர்களுடன் ஒருங்கிணைப்பு கூட்டம் ஒன்றை தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நடத்தினார். இதில் இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பும் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சீனாவில் இருந்து வந்த 12 பேரிடம் மருத்துவ பரிசோதனை நடந்தது. இதில், தமிழகத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் கூறிய அவர், கொரோனா வைரசை தடுக்கும் தற்காப்பு நடவடிக்கைகள், கண்காணிப்பு பணிகள் தொடரும். வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை தமிழகம் முழுவதும் விரிவுப்படுத்தி உள்ளோம் என்றார். மேலும்,
கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய வதந்திகளை யாரும் நம்பவேண்டாம் என்றும் தெரிவித்தார்.