கொரோனோ வைரஸ் தாக்குதல் எதிரொலியாக கோவை to கேரளா செல்லும் சாலையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனோ வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு விதமான கட்டுபாடுகளை விதித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகம் மற்றும் கேரளா, கர்நாடகம், ஆந்திரா இடையிலான வாகன போக்குவரத்து தற்போது நிறுத்தப்பட்டு அத்தியாவசிய வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளித்து உள்ளே விடப்பட்டு வந்த நிலையில் இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவு வந்ததையடுத்து நள்ளிரவு முதல் கோவை மாவட்டத்திலிருந்து கேரளா செல்லும் சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்படி கோவை – கேரளா எல்லையில் உள்ள முள்ளி, ஆனைகட்டி, டிப்சிலிப் என 14 வழித்தடங்கள் மூடபட்டுள்ளன. மேலும் தமிழக எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதன்படி வாளையாறு சோதனை சாவடியில் மட்டும் 100-க்கும் அதிகமான போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.பால், காய்கறி, மருத்துவம் போன்ற அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் மட்டுமே தற்போது அனுமதிக்கபட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது மற்ற வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…