கழுகு பார்வையில் எல்லைகள்-அதிதீவிர கண்காணிப்பு-14 வழிதடங்கள் மூடல்

Default Image

கொரோனோ வைரஸ் தாக்குதல் எதிரொலியாக கோவை to கேரளா செல்லும் சாலையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனோ வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு விதமான  கட்டுபாடுகளை விதித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகம் மற்றும் கேரளா, கர்நாடகம், ஆந்திரா இடையிலான வாகன போக்குவரத்து தற்போது நிறுத்தப்பட்டு அத்தியாவசிய வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளித்து உள்ளே விடப்பட்டு வந்த நிலையில் இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவு வந்ததையடுத்து நள்ளிரவு முதல் கோவை மாவட்டத்திலிருந்து கேரளா செல்லும் சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்படி கோவை – கேரளா எல்லையில் உள்ள முள்ளி, ஆனைகட்டி, டிப்சிலிப் என  14 வழித்தடங்கள் மூடபட்டுள்ளன. மேலும் தமிழக எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதன்படி வாளையாறு சோதனை சாவடியில் மட்டும் 100-க்கும் அதிகமான போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.பால், காய்கறி, மருத்துவம் போன்ற அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சரக்கு வாகனங்கள்  மட்டுமே தற்போது அனுமதிக்கபட்டு வருகின்றன  என்பது குறிப்பிடத்தக்கது மற்ற வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்