தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் அதிரடி மாற்றம்… தமிழக சுகாதாரத் துறை புதிய உத்தரவு…

தமிழகத்தில் கொடிய கொரோனா வைரஸ் தொற்றினை எதிர்த்து போராடும் உன்னத பணியினை செய்து வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் மருத்துவர். திருவாசகமணி தற்போது திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். டீன் திருவாசகமணியை விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு நேற்று இரவு அதிரடியாக மாற்றி தமிழக சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இவருக்கு பதில் தூத்துக்குடி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையின் டீனாக விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி டீன் ரேவதி நியமிக்கப்பட்டுள்ளார். கொரோனா பரிசோதனை மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவில்லை என புகார் கூறிய டீனின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோ சமூக வைலைதளங்களில் வைரலானதை அடுத்து தூத்துக்குடி கல்லூரி டீன் திருவாசகமணி அதிரடி மாற்றம் செய்யப்பட்டார். இந்த கொரோனா காலத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் டீன்க்ள் மாற்றப்படுவது இது நான்காவது முறை ஆகும். ஏற்கனவே சென்னை ஸ்டான்லி, கோவை, திருச்சி மருத்துவக் கல்லூரி டீன்கள் மாற்றம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025