கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடும் கட்டுப்பாடுகள் விதித்து அரசு அரசாணை வெளியீடு… அந்த கட்டுப்பாடு குறித்த தகவல்கள் உங்களுக்காக…

Published by
Kaliraj

கொரோனா வைரஸ் பரவல கட்டுப்படுத்த தமிழக அரசு தமிழகத்தில் 144 தடை உத்தரவைத் தொடர்ந்து பொதுமக்களுக்கான அதிரடி  கடும் கட்டுபாடுகளை தமிழக அரசு அறிவித்து, தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது.
அதில், 
தமிழகத்தில் மார்ச் 24ம் தேதி (இன்று) மாலை 6 மணி முதல் ஏப்ரல் மாதம்  1ம் தேதி வரை கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

  • தனிமைப்படுத்தப்படும் நோய் தொற்று உள்ளவர்கள்:
    கொரோனா அறிகுறிகள் உள்ள சந்தேகத்துக்குரிய அனைத்து நபர்கள், 2020, மர்ச் 1ம் தேதிக்கு பிறகு வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பியவர்கள் அனைவரும் உள்ளூர் சுகாதாரத்துறை அதிகாரிகளின் முடிவுப்படி தனிமைப்படுத்தப்படுவார்கள்.
  • பொதுமக்கள் அனைவரும் வீடுகளிலேயே தங்கியிருக்க வேண்டும். அடிப்படை மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியில் செல்ல வேண்டும்.
  • சமூக ரீதியான இடைவெளியை குறிப்பாக ஒருவரிடம் இருந்து 1 மீட்டர் அல்லது 3 மீட்டர் தூரம் வரை விலகி இருப்பதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்படுகிறது.

வர்த்தக நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகள்:

  • அனைத்து கடைகள், வர்த்தக நிறுவனங்கள், டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும்.
  • அரிசி, பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், மசாலா பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவு, மளிகை பொருட்கள், பால், பிரட், பழங்கள், காய்கறிகள், இறைச்சி, முட்டை, மீன் போன்ற அத்தியாவசிய பொருட்கள் மற்றும் அவை சார்ந்த போக்குவரத்து நடவடிக்கைகள்.
  • பால், கோழித்தீவன்ம், கால்நடைத்தீவனம், பால் பூ
    அனைத்து அரசு அலுவலகங்கள், தன்னாட்சி அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள் மூடப்பட வேண்டும்.
  • ஊடக அலுவலகங்கள் அவை சார்ந்த நிறுவனங்கள்.
  • ஐ.டி., நிதி சேவை பேக் ஆபீஸ் மற்றும் ஐ.டி.இ.எஸ். கம்பெனிகள். ஐ.டி. மற்றும் ஐ.டி.இ.எஸ். கம்பெனிகள் தங்கள் ஊழியர்கள் வீடுகளில் இருந்து வேலை செய்வதை உறுதிப்படுத்த வேண்டும்.
  • உணவு விடுதிகள், சிற்றுண்டி சாலைகள், சமையலகங்களில் இருந்து உணவு எடுத்து செல்ல மட்டுமே அனுமதி.
  • பெட்ரோல் விற்பனை நிலையங்கள், சமையல் எரிவாயு நிறுவனங்கள், எண்ணெய் நிறுவனங்கள், அவற்றின் சேமிப்பு கிடங்குகள்
  • இ-வணிகம், மருந்து மற்றும் அத்தியாவசிய தேவைக்கு அனுமதி.  சுவிக்கி,சோமேட்டோ, ஊபர் உள்ளிட்டவற்றிக்கு தடை விதிக்கப்படுகிறது
  • மருத்துவப் பொருட்கள் / உபகரணங்கள், மருந்துகள் மற்றும் உயிரியல் தொழில் நுட்பப் பிரிவுகள்
  • உணவு சார்ந்த பொருட்கள் / மாவு மில் உள்ளிட்ட உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள்
  • ஏற்றுமதி பிரிவுகள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் கீழ் வரும் நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களைக் கொண்டு சுழற்சி முறையில் பணிகளைத் தொடரலாம்
  • அத்தியாவசியப் பொருட்கள், விவசாயப் பொருட்கள், விவசாயத்துக்கு தேவையானவை, சில்லரை மற்றும் மொத்த விலையில் உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்யும்

போக்குவரத்துக்கு அரசு விதித்திருக்கும் கட்டுப்பாடுகள்:

  • நிறுவனங்கள்தகவல் தொழில் நுட்பம் மற்றும் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த சேவையில் இருக்கும் நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து அழைத்து வரவும், வீட்டிற்கு கொண்டு சென்று விடவும் போக்குவரத்து ஏற்பாடு செய்யும் டிராவல்ஸ் நிறுவனங்கள்
    போக்குவரத்து
  • ஆம்புலன்ஸ்
  • விலக்கு அளிக்கப்படும் பிரிவின் கீழ் வாகனங்கள் / கார் உரிமையாளர்கள் மற்றும் ஒப்பந்தம் எடுத்த நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து அழைத்து வர, திரும்ப கொண்டு சென்று விடவும்
  • லாரி, டெம்போ, சரக்கு லாரி, கண்டெய்னர் உள்ளிட்ட அனைத்து வித சரக்கு வாகனங்கள்
  • மருத்துவமனைகள், விமான நிலையத்தில் இருந்து நோயாளிகள், பயணிகளை வீட்டுக்கு அழைத்து செல்லும் கார்கள்
    தனியார் பஸ்கள், ஆம்னி பஸ்கள், மாநில போக்குவரத்துக் கழகம், மெட்ரோ சேவைகள், டாக்சி, ஷேர் ஆட்டோக்கள், ஆட்டோ ரிக்‌ஷாக்கள் மற்றும் மாநில போக்குவரத்துக் கழகத்தின் ஏ.சி. வசதி கொண்ட பஸ்கள் இயக்க அனுமதி இல்லை.
  • மாநிலங்களுக்கு இடையேயான மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பஸ் சேவைகள் நிறுத்தப்படுகின்றன.
  • இறுதிச் சடங்கிற்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள்

கல்வி நிறுவனங்களுக்கு அரசு விதித்திருக்கும் கட்டுபாடுகள்:

  • அனைத்து கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள் மார்ச் 31ம் தேதி வரை அவரவர் வீடுகளிலேயே இருந்து வேலை செய்ய அனுமதிக்கப்படுகிறது. தேர்வுகள் நடத்தும் மற்றும் விடைத்தாள் திருத்துபவர்களுக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் மருத்துவ பிரிவு அனைத்து அரசு, தனியார், சுயநிதி பல்கலைக்கழகங்கள், மருத்துவம்/பல் மருத்துவம் மற்றும் செவிலியர் கல்லூரிகளுக்கு இந்த தடையில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
    விலக்கு அளிக்கப்பட்டவை
  • மருத்துவமனைகள், டிஸ்பென்சரிகள், கிளினிக்குகள், மருமருந்துக்கடைகள், கண் கண்ணாடி கடைகள், ஆக்சிஜன் சிலிண்டர் யூனிட்கள், மருந்தகங்கள், மருத்துவ உபகரண தயாரிப்பு/சேவை யூனிட்கள், சுகாதாரம் சார்ந்த உபகரணம் தயாரிப்பு யூனிட்கள் மற்றும் அவை சார்ந்த போக்குவரத்து நடவடிக்கைகள்.

பிளஸ்1 தேர்வு ஒத்திவைப்பு

  • பிளஸ் 2க்கு இன்று நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தேர்வுகள் மாற்றமின்றி நடத்தப்படும்.
  • 26ம் தேதி நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ள பிளஸ் 1 தேர்வுகள் தள்ளிவைக்கப்படுகிறது.
  • பள்ளிகள், கல்லூரிகள் தொடர்பான மற்ற தேர்வுகள் மற்றும் அரசு பணியாளர்களை தேர்வு செய்வதற்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகி

அரசு அலுவலகங்களுக்கு கட்டுப்பாடு:

  • வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். சேவைகள்
    அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் அரசு துறை வாகனங்கள்
    பொது பயன்பாடுகள் மற்றும் ஊடக சேவைகள்
  • மின் உற்பத்தி, பரிமாற்றம், வழங்கல் மாநகராட்சி கழிவு நீரேற்று நிலையங்கள்
  • அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள்
  • தபால், தொலைத் தொடர்பு, இணைய சேவை வழங்குபவர்
  • துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள்
  • உற்பத்தி நிறுவனங்கள், பாட்டில், கேன்கள் உள்ளிட்டவற்றில் குடிநீரை அடைத்து வினியோகம் செய்யும் போக்குவரத்து
  • சேமிப்பு கிடங்குகள், பண்டக சாலைகள்
    சுகாதாரம் மற்றும் மருத்துவ சேவைகள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைகளை தள்ளி வைத்துவிட்டு, கோவிட்-19 வைரசினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான படுக்கை வசதிகளை ஏற்படுத்துதல்
    வருவாய் நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகள், காவல்துறை மற்றும் முக்கிய துறைகள்கோவிட்-19 தொடர்பான நடவடிக்கைகளில் மேற்கூறிய அனைத்து துறைகளில் ஏதேனும் ஒன்றுடன் தொடர்பில் இருக்கும் தனியார் நிறுவனங்கள்
  • முதியோர் இல்லங்கள், அனாதை ஆசிரமங்கள், மாற்றுத் திறனாளிகள் இல்லங்கள், முதியோர் பாராமரிப்பு சேவை, வேலைக்கு செல்லும் பெண்கள் விடுதி ஆகியவற்றில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது
  • சிறப்பு பிரிவின் கீழ் விலக்கு பெற்றுள்ள கடைகள் கூட்ட நேரத்திலும், வாடிக்கையாளர் குறைவாக உள்ள நேரத்திலும் ஒருவருக்கொருவர் 3 அடி இடைவெளி இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். நாளொன்றுக்கு மூன்று முறை அந்த இடத்தை சுத்தப்படுத்த வேண்டும். வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் நுழைவு வாயிலில் சானிடைசர் வைத்திருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.
  • உற்பத்தி, தயாரிப்பு, போக்குவரத்து, சேமிப்பு, மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரம் என இதில் குறிப்பிட்டப்பட்டுள்ள அனைத்து சேவைகளும் அத்தியாவசியத் தேவைகளாகும். இவற்றை ஏற்றும் போதும், இறக்கும் போதும் ஓட்டுனர் உள்ளிட்டவர்களுக்கு தேவையான நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய வேண்டும்.
  • ஒரு சேவை அத்தியாவசியமானதா இல்லையா என்பது குறித்த சந்தேகம் ஏற்படும் நிலையில், அது குறித்து முடிவெடுக்க மாவட்ட ஆட்சியர், மாவட்ட நீதிபதிக்கு அதிகாரம் உண்டு. சென்னை போன்ற இடங்களில் சென்னை மாநகர ஆணையாளரும் அதனை உறுதி செய்யலாம். இது தொடர்பாக முன்னர் வெளியான உத்தரவுக்கும் இதற்கும் முரண்பாடு இருப்பின் உத்தரவில் கூறப்பட்டிருப்பதையே பின்பற்ற வேண்டும்.
  • அங்கன்வாடிகள், பள்ளிகள், கல்லூரிகள், அரசு நல விடுதிகள், மால்கள், தியேட்டர்கள், ஏசி வசதி கொண்ட கடைகள், கேளிக்கை பூங்காக்கள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி நிலையங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், நூலகங்கள், சுற்றுலா விடுதிகள், சுற்றுலா தலங்கள், கடற்கரைகள் உள்ளிட்டவை இந்த கால கட்டத்தில் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.
  • அனைத்து மத வழிபாட்டுத்தலங்கள் மூடப்படுகிறது. அதே நேரத்தில் தினசரி பூஜைகள் நடத்தப்படும்.
  • கடந்த 16ம் தேதியோ அதற்கு முன்னதாக உறுதி செய்யப்பட்ட திருமணங்கள் மட்டும் நடத்த அனுமதிக்கப்படுகிறது. அதில் அதிகபட்சம் 30 பேர் மட்டுமே பங்கேற்கலாம்.
  • திருமணங்கள் ரத்து செய்யப்பட்டால் அவற்றிற்கு கொடுக்கப்பட்ட அட்வான்ஸ் தொகையை மண்டப நிர்வாகம் திருப்பி தரவேண்டும்.
  • இது தொடர்பாக எந்த சந்தேகமும் எழுந்தால் மாநில அரசு தேவையான அறிவுரைகள் மற்றும் சந்தேகங்களுக்கு தீர்வு வழங்கும்.
    கொரோனா நோய்தொற்று பரவுவதை தடுக்கும் வழிமுறைகள்:
  • சினிமா தியேட்டர்களில் ஒவ்வொரு காட்சியும் முடிந்ததும் நாற்காலிகள், இருக்கைகள், கதவு கைப்பிடிகள், டிக்கெட் கவுன்டர்கள் உள்ளிட்டவற்றை கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யவேண்டும்.
  • பஸ்கள் மற்றும் ரயில்களில் வாசல் கதவு கைப்பிடிகள், வார்கள், இருக்கைகளை ஒவ்வொரு முறை பயணம் முடிந்த பின்பும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யவேண்டும்.
  • ஓட்டல்கள், லாட்ஜ்கள், திருமண மண்டபங்கள் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் அடிக்கடி கைகள் படும் இடங்களை கிருமி நாசினி தெளித்து அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.
  • நோய் கிருமிகளை அழிக்கும் கிருமிநாசினியில் 50 சதவீதம் கிரேசோலும், 50 சதவீத அளவுக்கு தண்ணீர் கலந்த சோப்பும் இடம்பெற்றிருக்க வேண்டும்
  • பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், பஸ்கள், ரயில்கள், வாகனங்கள் மால்கள், சினிமா தியேட்டர்கள், திருமண மண்டபங்களில் 19 லிட்டர் நீரில் 1 லிட்டர் கிருமி நாசினி கலந்து தெளிக்க வேண்டும். மருத்துவமனைகள், கிளினிக்குகள், ஆம்புலன்சுகளில் 9 லிட்டர் நீருடன் 1 லிட்டர் கிருமி நாசினி கலந்து தெளிக்கவேண்டும்.
  • பவர் ஸ்பிரே, வாட்டர் வாஷ் பம்புகள் ஆகியவற்றை பயன்படுத்தி கிருமிநாசினிகளை தெளிக்கலாம்.
    தொழில்நுட்ப வழிகாட்டுதல்
  • சுகாதாரத்துறை துணை இயக்குனர்கள், நகர சுகாதாரத்துறை அதிகாரிகள் தொழில்நுட்ப வழிகாட்டுதலை பெற கீழ்கண்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்
    `கோவிட் 19’’ தொடர்பான தகவல்களை பெற 24 மணி நேர
  • கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள்
  • 044-29510400             
  • 044-29510500           
  • 9444340496  இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Recent Posts

பாலியல் வன்கொடுமை – த.வெ.க தலைவர் விஜய் கடும் கண்டனம்!

பாலியல் வன்கொடுமை – த.வெ.க தலைவர் விஜய் கடும் கண்டனம்!

சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…

7 minutes ago

பாலியல் வன்கொடுமை- யார் இந்த ஞானசேகரன்? விசாரணையில் வந்த பகீர் தகவல்!

சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…

27 minutes ago

மாட்டிக்கிட்ட பங்கு! லோகேஷை காப்பி அடித்த அட்லீ..பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்!

சென்னை : அட்லீ இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றாலே  அந்த படங்கள் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறதோ அதே…

1 hour ago

நாங்கள் ஏன் திமுக கூட்டணியில் தொடர்கிறோம்? திருமாவளவன் விளக்கம்!

சென்னை : திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 2019 நாடாளுமன்ற தேர்தல் முதல் தற்போது வரையில் திமுக கூட்டணியில்…

1 hour ago

INDvAUS: நாளை 4-வது டெஸ்ட் போட்டி! பழையபடி ஓப்பனிங்கில் களமிறங்கும் ரோஹித் சர்மா?

ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ஆம் தேதி நடைபெறுகிறது. ஏற்கனவே, இரு அணிகளும் 5 போட்டிகள் மோதிக்கொள்ளும்…

2 hours ago

குப்புறபடுத்து தூங்குபவரா நீங்கள்? இந்த பதிவு உங்களுக்குத்தான்..

தூங்கும்போது குப்புறபடுத்து தூங்குவதால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் பற்றி மருத்துவர்கள் கூறியதை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை…

2 hours ago