சீனாவின் வூகான் நகரில் பரவிய கொரோனா வைரஸ் அந்நாட்டை மட்டுமின்றி உலகையே உலுக்கி வருகிறது. இந்நிலையில் சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் குறையத்தொடங்கியுள்ளது. ஆனால் அதேசமயம் பல நாடுகளில் அது அதன் தீவிரத்தை காட்ட தொடங்கியுள்ளது. இந்த கொரோனா இத்தாலி, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளை நிலைகுலைய வைத்துள்ளன. இதேபோல் இந்தியாவிலும் இதன் தாக்கம் வித்தியாசப்படவில்லை. இதனால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் இந்த ஊரடங்கு உத்தரவால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. எனவே அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்தது. அதில், இலவசமாக ரேசன் பொருளகள், இலவச சிலிண்டர், நிதியுதவி, என பல சலுகைகளை அறிவித்தது. இந்நிலையில் தற்போது அத்தியவசியமாக தேவைப்படும் கிருமி நாசினிகள், முகக்கவசங்க்கள் மற்றும் உணவுப்பொருள்களை பதுக்கி கொள்ளை லாபம் பார்க்க காத்திருக்கிறார்கள் பதுக்கல்காரர்கள். எனவே, தற்போது காவல்துறை சார்பில் ஓர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதில், கிருமிநாசினிகள், முகக்கவசம், கையுறைகளை பதிக்கினாலோ, அல்லது அதிக விலைக்கு விற்றால் அவர்கள் மீது அத்தியாவசிய பொருள்கள் கடத்தல் தடுப்பு சட்டம் பாயும் என்வும், மேலும் ரேஷன் பொருட்களை கள்ளச் சந்தையில் விற்றால் அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…
டெல் அவில் : இஸ்ரேல் ஹமாஸ் போரானது கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் தொடங்கி 15 மாதங்களை கடந்து…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…