ரேஷன் பொருள்களை பதுக்கினால் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும்… சீர்மிகு காவல்துறை அதிரடி எச்சரிக்கை…

Default Image

சீனாவின் வூகான் நகரில் பரவிய கொரோனா வைரஸ் அந்நாட்டை மட்டுமின்றி உலகையே உலுக்கி வருகிறது. இந்நிலையில் சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் குறையத்தொடங்கியுள்ளது. ஆனால் அதேசமயம் பல நாடுகளில் அது அதன் தீவிரத்தை காட்ட தொடங்கியுள்ளது. இந்த கொரோனா இத்தாலி, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளை நிலைகுலைய வைத்துள்ளன. இதேபோல் இந்தியாவிலும் இதன் தாக்கம் வித்தியாசப்படவில்லை. இதனால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் இந்த ஊரடங்கு உத்தரவால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. எனவே அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்தது. அதில், இலவசமாக ரேசன் பொருளகள், இலவச சிலிண்டர், நிதியுதவி, என பல சலுகைகளை அறிவித்தது. இந்நிலையில் தற்போது அத்தியவசியமாக தேவைப்படும் கிருமி நாசினிகள், முகக்கவசங்க்கள் மற்றும் உணவுப்பொருள்களை பதுக்கி கொள்ளை லாபம் பார்க்க காத்திருக்கிறார்கள் பதுக்கல்காரர்கள். எனவே, தற்போது காவல்துறை சார்பில் ஓர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதில், கிருமிநாசினிகள், முகக்கவசம், கையுறைகளை பதிக்கினாலோ, அல்லது அதிக விலைக்கு விற்றால் அவர்கள் மீது அத்தியாவசிய பொருள்கள் கடத்தல் தடுப்பு சட்டம் பாயும் என்வும், மேலும்  ரேஷன் பொருட்களை கள்ளச் சந்தையில் விற்றால் அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்