தற்போது கொடிய கொரோனா வைரஸ் தாக்கத்தினால் புதுச்சேரியில் உள்ள அரியாங்குப்பம் பகுதி மற்றும் திருபுவனை ஆகிய பகுதிகளை சேர்ந்த நான்கு பேருக்கு கொரானா நோய்த்தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும், சட்டமன்ற உறுப்பினர் ஜெயமூர்த்தி மற்றும் அதிகாரிகள் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அந்தப் பகுதி மக்களுக்கு செய்யப்பட்டு வரும் மருத்துவ சேவைகள் மற்றும் வழங்கப்பட்டு வரும் அத்தியாவசிய பொருட்கள் குறித்தும் கேட்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள காய்கறி கடைகளுக்கு சென்று அங்குள்ள மக்கள் முகக்கவசம் அணியும் படியும் சுகாதாரமாகவும் மற்றும் கிருமிநாசினி கொண்டு தங்களை பாதுகாத்துக் கொள்ளவும் அறிவுறுத்தினார். பின், நெட்டப்பாக்கம் தொகுதி கரியமாணிக்கம் பகுதியில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி, அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜயவேணி ஆகியோர் அப்பகுதியை ஆய்வு செய்தனர்.
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…
சென்னை: தமிழகத்தில் கனிம வளங்கள் அடிப்படை யில், நில வரி விதிப்பதற்கு, குவாரி உரிமையா ளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.…
கோவை : தமிழ்நாடு அரசியலில் எதிரும் புதிருமாக இருந்து வரும் தவெக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் இன்றைய…
மும்பை : லக்னோ மற்றும் மும்பை அணிகள் மாலை 3:30 மணிக்கும், டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் இரவு 7:30…