ஊர் சுத்தமாக உழைக்கும் தூய்மை காவலர்களின் கால்களை கழுவி பாத பூஜை செய்த ஊராட்சி மன்ற தலைவி…

Published by
Kaliraj

கொரோனோ வைரஸ் தாக்கம் தற்போது  நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த கொரோனோவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் தற்போது  ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ துறை, காவல்துறை மற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் இனைந்து  மிகக் கடுமையாக கொரோனோவை கட்டுப்படுத்த போராடி வருகிறார்கள். இந்நிலையில், அரியலூர் மாவட்டம் கண்டராதித்தம் கிராமத்தில் சுமார்  1,250 குடும்பங்கள் வசிக்கின்றனர்.

அந்தப் பாதங்கள் புனிதமானவை ...

இந்த ஊரின் ஊராட்சிமன்றத் தலைவராக இருப்பவர் திருமதி. சந்திரா ராமமூர்த்தி. இவர் ஊரடங்கின் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த கண்டராதித்தம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களான  கண்டராதித்தம், பாக்கியநாதபுரம், க.மேட்டுத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் ரூபாய் 300 மதிப்பிலான அத்தியாவசிய பொருள்கள் அடங்கிய தொகுப்பை வழங்கியுள்ளார்.மேலும், தங்கள் கிராமத்தை தூய்மைப்படுத்தும் 11 தூய்மைப் பணியாளர்களையும் கௌரவிக்கும் பொருட்டு அவர்களை அழைத்து  அந்த உழைக்கும் தூய்மைப் பணியாளர்களின் கால்களைக் கழுவி பாதபூஜை செய்து வணங்கினார்.

இதைச் சற்றும் எதிர்பார்க்காத தூய்மைப் பணியாளர்கள் தங்கள் ஊராட்சி மன்றத் தலைவியை ஆரத்தழுவிக் கையெடுத்துக் கும்பிட்டனர்.இந்த செயல் அந்த ஊராட்சி மக்களிடம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Recent Posts

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித் மார்டின் கப்டில்! முக்கிய பொறுப்பு கொடுக்கும் நிர்வாகம்?

நியூசிலாந்து : அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில் தனது 14 வருட சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக…

3 minutes ago

திருப்பதி கூட்ட நெரிசல் : மன்னிப்பு கேட்ட தேவஸ்தான தலைவர் பிஆர் நாயுடு!

திருப்பதி : திருமலை திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த…

34 minutes ago

பெரியார் குறித்து சீமான் பேச்சு! கடும் கண்டனம் தெரிவித்த வன்னி அரசு!

கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை…

1 hour ago

திருப்பதி கூட்ட நெரிசலில் 6 பேர் பலி! பிரதமர் மோடி இரங்கல்!

திருப்பதி :  ஏழுமலையான கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி  ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் திறந்திருப்பதால் தரிசனம் செய்வதற்கான…

1 hour ago

விண்ணில் தொழில்நுட்ப கோளாறு.., இஸ்ரோ வெளியிட்ட முக்கிய அப்டேட்!

டெல்லி :  விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…

10 hours ago

பெரியாருக்கும் சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் சர்ச்சை பேச்சு!

கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…

11 hours ago