இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1500ஐ தாண்டியுள்ளது. இதில் பலியானோர் எண்ணிக்கையும் 50ஐ தொட உள்ளது.இந்நிலையில், இந்த நோய் பரவலைத் தடுக்க இந்தியா முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் பொதுமக்களுக்காக, ஆங்காங்கே கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கிருமி நாசினி கொடுத்து மக்களை கைக்கழுவுதலின் அவசியத்தை விளக்குகின்றனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தென்னம்பாளையத்தில் ஒரு காய்கறி சந்தையில் எப்போதும் இல்லாத முயற்சியாக ஒரு கிருமிநாசினி தெளிக்கும் ஒரு சுரங்கம் போன்ற பாதையை அமைத்துள்ளனர். இந்த பாதை வழியே காய்கறி வாங்குவோர் அனுமதிக்கப்படுகிறார்கள். அந்த வழி முழுவதும் கிருமிநாசினிகள் தெளிக்கப்படுகின்றனர். இந்த வழியை கடக்க 3 முதல் 5 வினாடிகள் ஆகும். அப்போது அவர்கள் உடல் முழுவதும் 360 டிகிரி கோணங்களிலும் கிருமி நாசினி தெள்ளிக்கப்பட்டு சுத்தம் செய்கிறது. இந்த புதிய முயற்ச்சி திருப்பூர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…