இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் அதன் தடுப்பு நடவடிக்கைகளுக்காக நிதி உதவி அளிக்கும்படி, நாட்டு மக்களுக்கு பாரத பிரதமர் மோடி அவ்ர்கள் வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து,விளையாட்டு, சினிமா, பிரபலங்கள், நிறுவனங்கள், பொதுமக்கள் என அனைவரும் தாராளமாக நிதி உதவி அளித்து வருகின்றனர்.
நிதி உதவி அளிக்கும் தனியார் நிறுவனங்களுக்கு புதிய சலுகை:
அதாவது இலாபத்தில் இயங்கும் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் 3 ஆண்டுகள் வருவாயில் கிடைக்கும் சராசரி நிகர லாபத்தில் 2 சதவீதத்தை ஒரு குறிப்பிட்ட நிதி ஆண்டில், சமூக பொறுப்புணர்வு திட்டங்களுக்கு செலவிட வேண்டும் என்பது வணிக நிறுவனச் சட்டத்தின் விதியாக உள்ளது. இந்நிலையில், பிரதமர் நிவாரண நிதியை அதிகரிப்பதற்க்காக மத்திய அரசு இந்த புதிய சலுகையை அறிவித்துள்ளது. இதன்படி, நிவாரணமாக நிறுவனங்கள் அளிக்கும் நிதி உதவி, வணிக நிறுவன சட்டங்களின் கீழ், அந்த தொகை சமூக நல செலவாக கருதப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் வணிக நிறுவனங்கள் நிவாரணமாக நிதி உதவி அளிக்க உதவும் என கருதுகின்றனர்.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…