தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த வைரஸின் தீவிரத் தன்மையை உணர்ந்த தமிழகத்தை சேர்ந்த பல்வேறு கிராம மக்கள், தங்களது கிராமங்களில் பாரம்பரிய முறைப்படி கொரோனாதடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன்படி ,மதுரை மாவட்டம் பேரையூருக்கு அருகில் உள்ள குமராபுரம் மற்றும் சிலைமலைபட்டி ஆகிய ஊர்களை சேர்ந்த இளைஞர்கள் பாரம்பரிய முறைப்படி கிராமத்தை கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்து வருகின்றனர். அவர்கள் மஞ்சள் பொடியை நீரில் கலந்து, அதனுடம் வேப்பிலை, கரித்தூசி, மாட்டு சாணம் ஆகியவற்றை நீரில் கலந்து ஊர் முழுவதும் இளைஞர் பட்டாளமும் சிறுவர் பட்டாளமும் இனைந்து இந்த முயற்ச்சியை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் இவர்கள் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறாமல் இருப்பதன் தற்போதைய அவசியம் குறித்தும், கை கழுவும் முறைகுறித்தும் கூட்டம் கூடாமல் ஒவ்வொரு வீடு வீடாக சென்று அறிவுறுத்தி வருகின்றனர். இந்த இளைஞர்களின் முயற்சி சமுக வலைதளங்களில் கருத்து மட்டும் பதிவிடும் இளஞர்களுக்கு மத்தியில் வரவேற்ப்பை பெற்றுள்ளது.
சென்னை : வேலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிமுக -பாஜக…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று மாநில உரிமைகள் குறித்த தீர்மானத்தை…
சென்னை : நேற்று முன்தினம் (ஏப்ரல் 14) அம்பேத்கர் பிறந்தநாள் விழா தமிழ்நாட்டில் சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டது. அம்பேத்கர் பிறந்தநாளை…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்த 2 முதல் 3 நாட்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை…
சண்டிகர் : நேற்று (ஏப்ரல் 15) நடைபெற்ற ஐபிஎல் 2025-இன் 31-வது போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட்…
டெல்லி : தற்போது நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் Fastag முறைப்படி சுங்கக்கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. Fastag கணக்கில்…