அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட கொரோனோ வைரஸ் மாதிரி படங்கள்…. இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியீடு….
கொரோனா வைரஸ் மூலம் ஏற்படும் கோவிட் -19 நோயின் இந்தியாவின் முதல் படங்கள் புனேவில் உள்ள இந்திய மருத்துவ விஞ்ஞானிகளால், டிரான்ஸ்மிஷன் எலக்ட்ரான் நுண்ணோக்கி இமேஜிங்கை முறையைப் பயன்படுத்தி எடுக்கப்பட்டு உள்ளன. அந்த படங்கள் தற்போது இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டு உள்ளன. கொரோனாவை ஏற்படுத்தும் சார்ஸ் குடும்பத்தை சேர்ந்த வைரஸ் சார்ஸ்-கோவ் -2 இன் படங்கள்,கடந்த ஜனவரி 30, 2020 அன்று இந்தியாவின் முதல் ஆய்வகத்தால் உறுதிப்படுத்தப்பட்டது. இந்த சோதனை தொண்டைப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டவை. இந்த , என்.ஐ.வி புனேவில் செய்யப்பட்ட சோதனையானது கேரளாவிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளின் மரபணு வரிசைமுறையும் சீனாவின் உகானில் கண்டறியப்பட்ட கொரோனோ வைரஸுடன் 99.98 சதவீதம் பொருந்தியது. இந்த வைரஸ் அமைப்பை டிரான்ஸ்மிஷன் எலக்ட்ரான் நுண்ணோக்கியில் 100 கே.வி மு மின்னழுத்தத்தின் கீழ் ஆய்வு செய்யப்பட்டு மற்றும் நவீன கேமரா மூலம் படம் பிடிக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.