கொரோனோ தாக்குதல் எதிரொலி… சென்னையிலிருந்து வெளிநாடு செல்லும் 18 விமானங்கள் ரத்து…
இந்தியாவில் கர்நாடகாவின் கல்புர்கியைச் சேர்ந்த 76 வயது முதியவர் அண்மையில் சவுதி அரேபியாவுக்குச் சென்றுவிட்டு நாடு திரும்பினார். இவருக்கு கொரோனோ தொற்று பாதித்தது. இந்நிலையில் இவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், டெல்லி ஜனக்புரி பகுதியைச் சேர்ந்தவர் அண்மையில் ஜப்பான், ஜெனீவா, இத்தாலிக்குச் சென்றுவிட்டு நாடு திரும்பினார். அவருக்கும் கொரோனோ வைரஸ் காய்ச்சல் தொற்று ஏற்பட்டிருப்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இந்திய்யாவில் வேகமாக பரவிவரும் கொரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் 18 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில், சென்னையில் இருந்து இலங்கை, சிங்கப்பூர், கத்தார், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் 18 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.