இந்தியாவில் கொடிய கோரோனோவின் பிடியில் சிக்கி இதுவரை 15 பேர் பலியாகி உள்ளனர். 653 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 42 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் 26பேர். இந்நிலையில், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள், தொடர்ந்து தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இதனடிப்படையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அத்தியவசிய பொருள்களை மட்டும் மக்கள் பயன்படுத்தும் பொருட்டு ஒரு சில கடைகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது. அதில், அத்தியவசிய பொருளான பாலும் ஒன்று, இந்நிலையில், இது தொடர்பாக பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்கங்கள் வெளியிட்ட அறிக்கையில் : தமிழகத்தில் நாளை அதிகாலை 3.30மணிக்கு தொடங்கும் பால் விற்பனை காலை 9 மணிக்கு முடிவடையும் என தற்போது தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. எனவே பொதுமக்கள் காலை 9 மணி வரை மட்டுமே பால் விற்பனை செய்யப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பால் முகவர்கள் கடைகளில் பால் விற்பனை நேரம் குறைக்கப்படும் என்றும், சில்லரை விற்பனை கடைகளுக்கு பால் விநியோகம் செய்யப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : வேலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிமுக -பாஜக…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று மாநில உரிமைகள் குறித்த தீர்மானத்தை…
சென்னை : நேற்று முன்தினம் (ஏப்ரல் 14) அம்பேத்கர் பிறந்தநாள் விழா தமிழ்நாட்டில் சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டது. அம்பேத்கர் பிறந்தநாளை…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்த 2 முதல் 3 நாட்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை…
சண்டிகர் : நேற்று (ஏப்ரல் 15) நடைபெற்ற ஐபிஎல் 2025-இன் 31-வது போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட்…
டெல்லி : தற்போது நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் Fastag முறைப்படி சுங்கக்கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. Fastag கணக்கில்…