அவசர மற்றும் தொடர் காய்ச்சல் இருப்போர் மட்டும் மருத்துவமனைக்கு வரவேண்டும்… தேவை ஏற்படாதோர் மருத்துவமனையை தவிர்க்க வேண்டுகோள்…
கோரோனா வைரஸ் நோய் பரவலைத் தடுக்கும் வகையில் மக்களுக்கு பல்வேறு துறைகள் சார்பில் தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதில், சுகாதாரத்துறை சார்பில், மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருவோர் ஒரு மீட்டர் இடைவெளியில் நிற்கும் வகையில் கோடுகள் போடப்பட்டுள்ளன. அந்த கோடுகளுக்குள் வரிசையில் நின்று பொதுமக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும், கோரோனா பரவுவதை தடுக்கும் வகையில், அவசர சிகிச்சை, தொடர் காய்ச்சல் மற்றும் தவிர்க்க முடியாத காரணம் இருந்தால் மட்டுமே மருத்துவமனைக்கு வர வேண்டும். மருத்துவமனைக்கு உள்ளே வரும்போதும், வெளியே செல்லும்போதும், கைகளை கிருமி நாசினி போட்டு கை கழுவ வேண்டும்.தேவைப்படும் பட்சத்தில்தான் பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியே வர வேண்டும். குழந்தைகளை சாலை, தெருக்களில் விளையாடுவதைத் தவிர்க்கவேண்டும். கரோனா வைரஸ் அறிகுறி மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தனி வார்டுகள் அமைத்து, அங்கு, வென்டிலேட்டர்களுடன் கூடிய படுக்கைகள் உட்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.