கொரோனா வைரஸ் விவகாரம்… மருத்துவர்கள், செவிலியர்கள் வீடுகளுக்கு செல்ல தடை… மருத்துவ மனையிலேயே தங்க அறிவுறுத்தல்…
கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், வீட்டிற்கு செல்லாமல், மருத்துவமனையிலேயே தங்க சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை அவசரகால கட்டுப்பாட்டு மைய அதிகாரி, திரு. நாகராஜன் அவர்கள் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, சிகிச்சையளிக்க கூடியவர்களுக்கு, அந்த பாதிப்பு நேரடியாக பரவ அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே அவர்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
எனவே, சுழற்சி முறையில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மற்றும் மருத்துவப்பணிய்யாளர்களை வீட்டிற்கு அனுப்பக் கூடாது என்றும், அவர்களை, மருத்துவமனை வளாகத்திலேயே தங்க வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவு கட்டாயம் அல்ல என்றும், விருப்பப்பட்டால் உரிய பாதுகாப்புடன் வீடுகளுக்கு செல்லலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.