கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற மாவட்ட வாரியாக மருத்துவமனைகளை அறிவித்தது தமிழக அரசு….

சீனாவில் வூகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் தொற்று தற்போடு உலகம் முழுவதும் பரவத்தொடங்கியது. இதன் காரணமாக உலகமே அதிர்ந்து போய் உள்ளது. உலக வல்லரசு அமெரிக்கா முதல் இத்தாலி, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து, வளைகுடா நாடுகள் வரை வளர்ந்த நாடுகளாலும் கட்டுப்படுத்த முடியாத ஒரு இக்கட்டான சூழலுக்கு ஆளாகியுள்ளது. ஆனால் இந்திய அரசு இந்த கொடிய கொரோனாவை எதிர்த்து ஒரு போரை நடத்தி வருகிறது. இதில் மாநில அரசும், பொதுமக்களும் இனைந்து இந்த வைரஸ் தாக்கத்தை எதிர்த்து வருகின்றனர்.
இதற்காக நாடு முழுவதும் ஊரடங்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இதில் தமிழக அரசு அதிரடி நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கொரோனா கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் அவர்கள் மாவட்ட வாரியாக எந்தெந்த மருத்துவமனைகளில் சேரலாம் என்ற அறிவிப்பை தற்போது தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் கொரோனா தொற்றுக்கான அறிகுறி யாருக்காவது இருந்தால் அவர்களுக்கு எளிதில் சிகிச்சை கிடைக்கும் வகையில் இந்த மாவட்ட வாரியான கொரோனா சிகிச்சைக்கான மருத்துவமனைகளை தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!
April 6, 2025
டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!
April 6, 2025