கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கோடிமுனை பகுதியை சேர்ந்த 40 வயதான ஒருவர், மார்ச் 3ம் தேதி குவைத் நாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பியுள்ளார். காய்ச்சலோடு வந்ததால், கொரோனா தொற்று இருக்குமோ என்று சந்தேகத்தோடு கடந்த புதன்கிழமை நாகர்கோவிலில் உள்ள அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அவருடைய ரத்தம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு திருநெல்வேலி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரத்தம் மாதிரிகள் பரிசோதிக்க அனுப்பட்ட நிலையில், அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அரசு மருத்துவர்கள் கூறுகையில், உயிரிழந்தவருக்கு ஏற்கெனவே கல்லீரல் மற்றும் மூளைக்காய்ச்சல் பாதிப்பு இருந்துள்ளது. ரத்த பரிசோதனை முடிவுகள் வந்த பின்னர் தான் அவரது இறப்புக்கான காரணம் தெரியவரும் என்று தெரிவித்தனர். இதனால் அப்பகுதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நீலகிரி : சீனாவில் 14 வயதுக்குட்பட்டோரை அதிகம் பாதித்துள்ள HMP வைரஸ் தொற்றானது இந்தியாவிலும் சிலருக்கு உறுதியாகியுள்ளது என தகவல்கள் வெளியாகின.…
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக…
நேபாளம்: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், மீண்டும் நிலநடுக்கம்…
சென்னை : வரும் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட்…
சென்னை: மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான நடிகர் சூர்யாவின் "கங்குவா" திரைப்படம் திரையரங்குகளில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. பாக்ஸ் ஆபிஸிலும்…
சென்னை : சீனாவில் பாதிக்கும் HMPV தொற்றானது, தற்போது தமிழகத்திலும் பரவ தொடங்கியுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும், சென்னையை…