முதல்வர் பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் காணொளி காட்சி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் கொரோனா தடுப்புப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களிடம் பேசி வருகிறார். அப்போது தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,242 ஆக இருந்த நிலையில் தற்போது 1,267 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து மேலும் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்து நிலையில், பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை அளித்து வந்த 11 மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.
இதனிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 180 ஆக உயர்ந்துள்ளது என முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் கொரோனா தொற்று பரவும் தீவிரம் குறைந்துள்ளது. மத்திய அரசு கூறுவதற்கு முன்னரே தடுப்பு நடவடிக்கை தமிழகத்தில் துரிதப்படுத்தியது என்றும் கொரோனா தொற்றைத் தடுப்பதுதான் மிக முக்கியம் அதை தான் அரசு செய்து வருகிறது குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்துவிடும் என்றும் 27 மையங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 5,590 பரிசோதனைகள் செய்து வருகிறோம் என தெரிவித்தார். மேலும் இதுவரை 17,835 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 16,452 பேரின் பரிசோதனை முடிவுகள் வெளிவந்துள்ளன. 1,383 பேரின் பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது என தெரிவித்துள்ளார்.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 5ஆவது நாளாக அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் சோகத்தில் உள்ளனர். கடந்த 4…
சென்னை : ரஜினிகாந்தை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது தற்போதைய அரசியல்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு இருவரும் விவாகரத்து செய்வதாக பேசி முடிவெடுத்து அறிவித்த நிலையில், இது ரசிகர்களுக்கு…
ரஷ்யா : உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில், உக்ரைன் புது…
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…