சென்னையில் கொரோனா வார்டில் பணிபுரிந்த இதய அறுவை சிகிச்சை மருத்துவர் பலி.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், சென்னையில், பட்டினப்பாக்கத்தை சேர்ந்தவர் வினோத் என்பவர், பேரூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இதய அறுவை சிகிச்சை மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார்.
பின் கொரோனா சிறப்பு வார்டில் பணியாற்றி வந்த இவருக்கு, சில நாட்களாக காய்ச்சல் மற்றும் மூச்சு திணறல் பிரச்னை இருந்துள்ளது. கடந்த 30ம் தேதி இவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், இவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இவர் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று மூச்சு திணறல் அதிகமாக காணப்பட்ட நிலையில், நேற்று முற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து இவரது உடலை, சுகாதாரத்துறை ஆய்வாளர் சிவகிருஷ்ணனிடம் தனியார் மருத்துவமனை நிர்வாகம், டாக்டர் வினோத் பெற்றோர் முன்னிலையில் ஒப்படைத்தனர்.
இவரது உடல், பட்டினப்பாக்கத்தில் உள்ள பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. மேலும், 33 வயதான மருத்துவர் உயிரிழந்துள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரது இருசக்கர வாகன விருப்ப பட்டியலில் நீண்ட வருடங்களாக கோலோச்சி வருகிறது…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 6] எபிசோடில் சத்யாவை போலீஸிடம் இருந்து பாதுகாக்கிறார் முத்து.. சத்யாவை தேடும் போலிஸ்…
அமேரிக்கா : உலகமே உற்று நோக்கி இருந்த அமெரிக்கத் தேர்தலில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று…
கோவை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். கோவை…
வாஷிங்க்டன் : உலகமே உற்று நோக்கிய அமெரிக்க அதிபர் தேர்தலானது இன்று அதிகாலை நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து நடந்த…
அமெரிக்கா : அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை நிறைவடைந்தது.…