கொரோனா தடுப்பு பணியில் திருநங்கையர் – அமைச்சர் வேலுமணி
கொரோனா தடுப்பு பணியில் திருநங்கையர்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் 50க்கும் மேற்பட்ட திருநங்கையர், கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும், ஒவ்வொருவரும் தினமும் 300 வீடுகளுக்கு சென்று நோய் தொற்று அறிகுறி குறித்து கணக்கெடுப்பு நடத்தி வருவதாகவும் அமைச்சர் வேலுமணி தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.