கொரோனாவால் உயிரிழந்த காவல் ஆய்வாளர்க்கு, 21 குண்டுகள் முழங்க அஞ்சலி.
இந்தியா முழுவதும் கொரோனா வைராஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலால் பொது மக்கள் மட்டுமல்லாது, மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபடும் அதிகாரிகளும் தான் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், சென்னை மாம்பலம் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளராகப் பணியாற்றியவர் பாலமுரளி. இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் கடந்த 5-ம் தேதி தனிமைப்படுத்தப்பட்டார்.
இதனையடுத்து, அவருக்கு காய்ச்சல் அதிமான நிலையில், கடந்த 7-ம் தேதி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்று மாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், இவரது உடல், கண்ணம்மாப்பேட்டை இடுகாட்டிற்கு கொண்டு வரப்பட்ட நிலையில், அங்கு காவல்துறை சார்பில் அவருக்கு 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி அடக்கம் செய்யப்பட்டது.
நெல்லை : இன்று (டிசம்பர் 20) திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் ஒரு கொடூர கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.…
சென்னை: அமெரிக்காவை சேர்ந்த யூடியூபர் ஜெய் ஸ்ட்ரேஸி (jay streazy) என்பவர், உலகமுழுவதும் உள்ள பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு…
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் திடீரென தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே…
ஹரியானா: இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவரும், ஹரியாணா முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சௌதாலா(89) மாரடைப்பால் காலமானார்.…
சென்னை: 2025ம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி 6ம் தேதி தொடங்கும் என்றும், அன்று தமிழக ஆளுநர்…
நெல்லை : இன்று தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஆழ்த்தும் வகையில் அதிர்ச்சியான சம்பவம் திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்துள்ளது. பட்ட பகலில் நெல்லை…