கொரோனா பாதிப்பிலிருந்து கரூர் மீண்ட நிலையில் இன்று மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
தமிழகத்தில், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. அதே நேரத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நேற்று தமிழகத்தில் 161 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இதனால், மொத்த பாதிப்பு 2323 ஆக உயந்தது. தமிழகத்தில்,கொரோனா பாதிப்பே ஏற்படாத மாவட்டமாக கிருஷ்ணகிரி உள்ளது. சமீபத்தில் ஈரோடு, நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்தனர்.
கொரோனாவால் கரூரில் 42 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்றுமுன் தினம் வரை 41 பேர் வீடு திரும்பினார். இதைத்தொடர்ந்து, மீதம் இருந்த ஒருவரும் நேற்று குணமடைந்து வீடு திரும்பியதால் கரூர் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது. இந்நிலையில்,இன்று சென்னை ராயபுரத்தில் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி கரூரைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நபர் கடந்த 24-ம் தேதி சென்னையில் இருந்து கரூர் வந்துள்ளார். தற்போது அவர் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுரை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், அரசியல் களத்தில் 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது.…
கட்டாக் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் இன்று…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா துறையில் மட்டுமல்ல தனக்கு விருப்பமான ரேஸிங் துறையிலும் மிகுந்த உத்வேகத்துடன் கலந்து கொண்டு…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி…
சென்னை : மத்திய கல்வி கொள்கையின் PM Shri திட்டத்தில் தமிழ்நாடு இணைய வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து…