சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சீனாவிலும் உலகின் பிற நாடுகளிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த விளைவின் காரணமாக சர்வதேச விமான நிலையத்தில் சீனாவிலிருந்து வந்து சேருவோரிடம் தீவிர மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே தங்களது நாடுகளில் அனுமதிக்கின்றனர். இந்த வைரஸ் பல நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலால் சீனாவில் தினமும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.
சீனாவில் இதுவரை அங்கு உயிரிழப்பின் எண்ணிக்கை 304-ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரசால் 14,000க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே இந்த கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து வந்த கேரளா மாணவியிடம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சீனாவில் இருந்து கோலாலம்பூர் வழியாக சென்னை வந்த லியோ விஜினு என்பவருக்கு, விமான நிலையத்தில் நடத்தப்பட்ட ரத்த பரிசோதனையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு, உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…
கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…