கொரோனா தொற்று உறுதியானதால் மருத்துவமனையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கொரோனா நோயாளி!
கொரோனா தொற்று உறுதியானதால் தற்கொலை செய்து கொண்ட கொரோனா நோயாளி.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், தமிழகத்தில் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பால், 36,841 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 326 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், திருவள்ளூரில், 50 வயது நபர் ஒருவர் காய்ச்சல் காரணமாக, அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவரை பரிசோதித்த போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மனமுடைந்த அவர், மருத்துவமனையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.