தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவும் அபாயம் – தமிழக அரசு அறிவிப்பு

Default Image

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளது .கொரோனவை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் கொரோனா தொடர்பாக தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.அதில், தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஆய்வகங்கள் மற்றும் மருத்துவமனைகள் கொரோனா பற்றிய தகவல்களை 24 மணி நேரத்திற்குள் அரசுக்கு தெரிவிக்க வேண்டும்

அரசு/ தனியார், அலுவலகங்கள்/மருத்துவமனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், பள்ளிகள், கல்லூரிகள், திருமண மண்டபங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், வணிக வளாகங்கள், வழிபாட்டுத்தலங்கள், தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் முதலான இடங்களில் பணிபுரிபவர்கள் மாணவ, மாணவியர் மற்றும் வருகை புரிபவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவையான அளவு தண்ணீர் குழாய்கள் மற்றும் திரவ சோப்பு கரைசல் அல்லது கைகளை சோப்பு வைக்கப்படவேண்டும்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் அவ்வப்பொழுது முழுவதுமாக கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து நோய்த்தொற்று ஏற்படாத வகையில் பராமரிக்கப்பட வேண்டும்.நோய்த்தொற்று நடவடிக்கைகளை எடுக்கத் தவறும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் .அரசின் அறிவுரைகளை பின்பற்றாதவர்களுக்கு 6 மாத சிறை அல்லது அபராதம் வசூலிக்கப்படும்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்