கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சையளிக்க மருத்துவ குழு தயார் நிலையில் உள்ளது. மத்திய அரசு அனுமதி அளித்தவுடன் உடனே சிகிச்சை அளிக்கப்படும். – தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.
கொரோனாவை வைரஸை அழிக்க உலக ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து, குணமடைந்து சென்றவர்களின் ரத்த மாதிரிகளை எடுத்து, அதில் உள்ள பிளாஸ்மாவை பிரித்தெடுத்து, அதன் மூலம் கொரோனா பாதித்தவர்களை குணப்படுத்தும் முயற்சியில் தமிழகம் முயன்று வருகிறது.
இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டையில் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பேசுகையில், ‘ பிளாஸ்மா சிகிச்சை முறைப்படி கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளோம். அவர்கள் மருத்துவ குழுவுடன் ஆராய்ந்து வெகு விரைவில் பதிலளிப்பதாக கூறியுள்ளார். அனுமதி வந்தவுடன் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சையளிக்க மருத்துவ குழு தயார் நிலையில் உள்ளது.’ என அவர் தெரிவித்தார்.
மேலும், ‘ பொதுமக்கள் முழு ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். ஆகவே முழு ஊரடங்குக்கு ஒத்துழைப்பு தருமாறு,’ கேட்டுக்கொண்டார்.
டெல்லி : நேற்று (ஜனவரி 6) மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில்…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அத்தொகுதிக்கு இன்று…
நேபாளம்: நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று (ஜன,7) நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.35 மணியளவில், நேபாள், திபெத் எல்லையில் 7.1 ரிக்டர்…
துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதிவேகமாக வந்த…
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ இவிகேஎஸ்.இளங்கோவன் மறைவை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து…
சென்னை :இட்லி தோசைக்கு ஏற்ற பூண்டு பொடி தயார் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். தேவையான…