கைதிகளை சந்திக்க தடை..அடுத்த உத்தரவு பிறப்பிப்பு!
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 114 ஆக அதிகரித்துள்ளது.இதனால் மத்திய ,மாநில அரசு கொரோனோ வைரஸை தடுக்க பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் பள்ளிகள்,கல்விநிறுவனங்களுக்கு தமிழக அரசு மார்ச் 31 வரை விடுமுறை அறிவித்தும் மேலும் தமிழக எல்லைகள் தீவிரமாக கண்காணிக்க முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட்ட நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகள் மற்றும் கிளைச் சிறைகளில் கைதிகளை சந்திக்க 2 வார காலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய சிறை மற்றும் கிளைச் சிறைகளில் உள்ள கைதிகளை வழக்கறிஞர்கள், அவர்களின் உறவினர்கள் சந்திக்க 2 வார காலத்திற்கு சிறைத்துறை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.