கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா வைரஸ் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பதே அதிகாரப்பூர்வ தகவல் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.சீனா மட்டும் அல்லாமல் உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவி வருகிறது.இதனால் உலகின் பிற நாடுகளும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தினால் சீனாவில் தினமும் உயிரிழப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்த வைரசால் 14,000க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இந்த வைரஸ் இதுவரை இந்தியாவில் உள்ள கேரள மாநிலத்தில் இருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே தமிழகத்தில் இந்த வைரஸ் குறித்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், கொரோனா வைரஸ் அறிகுறி எதுவுமில்லை தமிழகத்தில் மருத்துவத்துறை கண்காணிப்பில் உள்ள 12 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி எதுவுமில்லை.தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புள்ளதாக யாரும் கண்டறியப்படவில்லை.கொரோனா வைரஸ் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பதே அதிகாரப்பூர்வ தகவல் ஆகும்.கொரோனா வைரஸ் பாதிப்பு நாடுகளில் இருந்து வந்த 799 பேர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக…