தமிழகத்தில் கொரோனா தொற்று 3-வது நிலைக்கு செல்ல வாய்ப்பு .! முதல்வர் பழனிச்சாமி .!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் நிலை மற்றும் தடுப்பு நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து இன்று முதலமைச்சர் பழனிசாமி கொரோனா வைரஸ் தடுக்க, அமைக்கப்பட்ட 12 குழுக்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக்கு பின்னர் தற்போது சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார்.
அப்போது பேசிய அவர் , தமிழகத்தில் இன்னும் 344 பேரின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளன. 4 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்டு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. இன்றிரவு தமிழகத்திற்கு முதலில் 50 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட் வரும் என்று கூறினார்.
மேலும் தமிழகத்தில் கொரோனா தொற்று 2-வது நிலையில் உள்ளது. 2-வது நிலையில் உள்ள கொரோனா தாக்கம் 3-ஆம் நிலைக்கு செல்ல வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார். கொரோனாவின் தாக்கத்தை பொறுத்தே ஊரடங்கு நீட்டிக்கப்படும் எனவும் கூறினார்.
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 8 ஆகவும், வைரஸில் இருந்து குணமடைந்து 21 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.