தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 2599 ஆக உயர்வு!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இன்று மட்டுமே 434 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், தமிழகத்தில் இதுவரை 10,108 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்திருந்து இன்று 359 பேர் வீடு திரும்பிய நிலையில், மொத்தமாக 2599 பேர் வீடு திரும்பியதாக தமிழ்நாடு சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.