ஈரோடு மாவட்டத்தில் 35 நாட்களாக கொரோனா தொற்று இல்லை.!

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 35 நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று அம்மாவட்ட ஆட்சியர் கதிரவன் கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 35 நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று அம்மாவட்ட ஆட்சியர் கதிரவன் தெரிவித்துள்ளார். மேலும், வெளிமாநிலங்களை சேர்ந்த 1,500 பேருக்கும் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இல்லை என்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த 3,267 பேருக்கும் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட பிறகே அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் தனியார் திருமணமண்டபத்தில் தங்கவைத்து மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வரும் வடமாநில தொழிலாளர்களை சிறப்பு இரயில் மூலம் அனுப்பும் பணியை மாவட்ட ஆட்சியர் கதிரவன் ஆய்வு மேற்கொண்டார். இதனிடையே, ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 70 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார். மீதம் 69 பேர் வைரஸில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!
April 6, 2025
திறப்பு விழா அன்றே பழுது..! பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் பாலத்தின் தற்போதைய நிலை என்ன?
April 6, 2025
வேட்டி சட்டையில் என்ட்ரி.! பாம்பனில் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
April 6, 2025
நடிகர் ஸ்ரீதர் மறைவு: சினிமா பிரபலங்கள் அஞ்சலி.!
April 6, 2025