கொரோனா பாதிக்கப்பட்டவர்களை சென்னை மாநகராட்சி மண்டல வாரியாக பிரித்து பட்டியல் வெளியிட்டு உள்ளது. அதில், முதல் முறையாக நேற்று அம்பத்தூரில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில், கொரோனா வேகமாக பரவி வருவதால் 1,596 பேர் பாதிப்படைந்து உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு 18 பேர் பலியாகி உள்ளனர்.மேலும் 635 பேர்குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. இங்கு, 358 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களை சென்னை மாநகராட்சி 15 மண்டல வாரியாக பிரித்து பட்டியல் வெளியிட்டு உள்ளது.
அந்த பட்டியலில், ராயபுரம் முதல் இடத்தில் உள்ளது. ராயபுரத்தில் 116 பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து, திரு.வி.க. நகர் 42, தேனாம்பேட்டை 42, தண்டையார்பேட்டை 46, கோடம்பாக்கம் 35, அண்ணா நகர் 27 பேர் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
மேலும், மணலில் மட்டும் யாரும் பாதிக்கப்படவில்லை என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை: இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவான படம் "மதகஜராஜா" திரைப்படம் 12 வருடங்களுக்கு பின்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், தொடர்ந்து தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான தனது…
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் L.B. நகர் கமினேனி மருத்துவமனையில் தானம் செய்யப்பட்ட இதயத்தை மருத்துவ பணியாளர்கள் 13 கிலோ…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின்…
நியூ யார்க் : அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் நாள் நெருங்கிவிட்டது என்றே கூறவேண்டும். அதற்கான உறுதி…