எதுக்கு?? ராணுவம் தேவையில்லை தமிழ்நாட்டுக்கு – தலைமைச் செயலாளர் தடாலடி

Published by
kavitha

கொரோனோ தடுப்பு நடவடிக்கையில் தமிழகத்துக்கு ராணுவம் தேவையில்லை  என்று தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேற்று அவருடைய மாளிகையில் சந்தித்த  தமிழக முதலமைச்சர் பழனிசாமி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார். முதல்வர் உடன் தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், டிஜிபி திரிபாதி உடன்  இருந்துள்ளனர்.

இந்த சந்திப்பிற்கு பிறகு  செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம், மருத்துவர்களுக்கு N95 முகக்கவசம் அணிந்துதான் வேலைபார்க்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும் 1.5 கோடி முகக்கவசம் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது.N95 முகக்கவசம் 25 லட்சமும்,  2500 வெண்டிலேட்டர்கள் வாங்கியுள்ளதாக தெரிவித்த அவர் டெல்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்று ஊர் திரும்பியவர்கள் தான் அதிக அளவில் கொரோனாவால் பாதித்து உள்ளனர்.

அவர்களும் தொடர் கண்காணிப்பில் இருந்து வருவதாக கூறிய அவர், மாநாடு சென்று வந்தவர்களை முழுமையாகக் கண்டறிந்தால் தான் கொரோனா பரவலை முற்றிலும் ஒழிக்க முடியும், அதற்கு தமிழக அரசு துரித நடவடிக்கை எடுத்து வருவதாக  கூறினார். தமிழகத்தில் முகக்கவசம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் திருப்பூரில் அதைத் தயாரிக்கும் பணியானது மிக விரைவாக நடைபெற்று வருகிறது.

சிறையில் இருப்பவர்களும் முகக்கவசம் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அரசு அறிவித்துள்ள நிவாரண உதவித் தொகையை வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.வீட்டு வாடகையை யாரும் கேட்கக் கூடாது. அதை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் தற்போது  தமிழகத்திற்கு ராணுவம் தேவையில்லை, போதுமான நடவடிக்கைகளை எல்லாம் துரிதமாக தமிழக காவல்துறை சிறப்பாகச் செய்து வருகிறது. யாருக்கும் சம்பளம் பிடித்தம் செய்யக் கூடாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளது, அதையும் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

Published by
kavitha

Recent Posts

“வேளாண் பட்ஜெட் பெயரில் பொய், புரட்டு” – அண்ணாமலை கடும் விமர்சனம்.!

“வேளாண் பட்ஜெட் பெயரில் பொய், புரட்டு” – அண்ணாமலை கடும் விமர்சனம்.!

சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…

23 minutes ago

“ஒருவித அழுத்தமான சூழல்., ஆனாலும்., ” சுனிதா வில்லியம்ஸ் மீட்பு குறித்து நாசா கருத்து!

வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர்  ஜூன் மாதம் முதல் சர்வதேச…

33 minutes ago

“மொழிகளைத் தாண்டி திரைப்படங்களை பார்க்க தொழில்நுட்பம் உதவியாக உள்ளது” – பவன் கல்யாணுக்கு கனிமொழி பதிலடி.!

சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…

1 hour ago

தவெக திருநெல்வேலி கிழக்கு மாவட்ட செயலாளர் சஜி காலமானார் – விஜய் இரங்கல்.!

சென்னை : தமிழக வெற்றி கழகத்தில் பெரும் கனவுடன் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சஜி, மாரடைப்பால் மறைந்தது அக்கட்சியினரை சோகத்தில்…

2 hours ago

எப்படி கண்ணா இது? சிம்பு குறித்து பேசிய ரஜினிகாந்த்!

சென்னை : நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை இருந்தாலும் அவருக்கு…

3 hours ago

செங்கோட்டையன் விவகாரம் : “யாரும் எங்கும் போகலாம்..,” கடுப்பான இபிஎஸ்!

சென்னை : நேற்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் 2025 - 2026 தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து இன்று வேளாண்…

3 hours ago