எதுக்கு?? ராணுவம் தேவையில்லை தமிழ்நாட்டுக்கு – தலைமைச் செயலாளர் தடாலடி
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
கொரோனோ தடுப்பு நடவடிக்கையில் தமிழகத்துக்கு ராணுவம் தேவையில்லை என்று தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேற்று அவருடைய மாளிகையில் சந்தித்த தமிழக முதலமைச்சர் பழனிசாமி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார். முதல்வர் உடன் தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், டிஜிபி திரிபாதி உடன் இருந்துள்ளனர்.
இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம், மருத்துவர்களுக்கு N95 முகக்கவசம் அணிந்துதான் வேலைபார்க்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும் 1.5 கோடி முகக்கவசம் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது.N95 முகக்கவசம் 25 லட்சமும், 2500 வெண்டிலேட்டர்கள் வாங்கியுள்ளதாக தெரிவித்த அவர் டெல்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்று ஊர் திரும்பியவர்கள் தான் அதிக அளவில் கொரோனாவால் பாதித்து உள்ளனர்.
அவர்களும் தொடர் கண்காணிப்பில் இருந்து வருவதாக கூறிய அவர், மாநாடு சென்று வந்தவர்களை முழுமையாகக் கண்டறிந்தால் தான் கொரோனா பரவலை முற்றிலும் ஒழிக்க முடியும், அதற்கு தமிழக அரசு துரித நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். தமிழகத்தில் முகக்கவசம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் திருப்பூரில் அதைத் தயாரிக்கும் பணியானது மிக விரைவாக நடைபெற்று வருகிறது.
சிறையில் இருப்பவர்களும் முகக்கவசம் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அரசு அறிவித்துள்ள நிவாரண உதவித் தொகையை வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.வீட்டு வாடகையை யாரும் கேட்கக் கூடாது. அதை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் தற்போது தமிழகத்திற்கு ராணுவம் தேவையில்லை, போதுமான நடவடிக்கைகளை எல்லாம் துரிதமாக தமிழக காவல்துறை சிறப்பாகச் செய்து வருகிறது. யாருக்கும் சம்பளம் பிடித்தம் செய்யக் கூடாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளது, அதையும் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
மாநிலங்களுக்கு மத்திய அரசு தரும் அல்வாதான் இப்போ ஃபேமஸ்! முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
February 7, 2025![mk stalin about CentralGovt](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/mk-stalin-about-CentralGovt.webp)
ரோஹித் சர்மா பார்ம் சரியில்லை! சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கேப்டனை மாற்றும் பிசிசிஐ?
February 7, 2025![Rohit Sharma CT](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Rohit-Sharma-CT.webp)
2வது போட்டியிலும் விராட் கோலி இல்லையா? ஆட்ட நாயகன் கில் சொன்ன பதில்!
February 7, 2025![Virat Kohli shubman gill](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Virat-Kohli-shubman-gill.webp)
மகா கும்பமேளா – சங்கராச்சாரியார் மார்க் பகுதியில் பயங்கர தீ!
February 7, 2025![kumbh mela fire accident](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/kumbh-mela-fire-accident.webp)