கரோனா வைரஸ் பாதிப்புக்காக, தமிழக அரசுக்கு சக்தி மசாலா நிறுவனம் 5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று 1000த்தை கடந்து மின்னல் வேகத்தில் பரவி கொண்டிருக்கிறது.அதன் வேகத்தை குறைக்க மத்திய மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் 67 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்..1 உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் கொரோனாவை எதிர்கொள்ள தேவையான நிதியை திரட்டும் விதமாக மக்களிடம் நிதியுதவி அள்ளிக்குமாறு தமிழக முதல்வர் வேண்டுகோள் ஒன்றை விடுத்தார். முதல்வரின் அழைப்பை அடுத்து பலரும் நிவாரண நிதியுதவி அளித்து வருகின்றனர்.இந்நிலையில் தற்போது த்மிழகத்தில் முன்னணி மசாலா தயாரிப்பு நிறுவனமாக திகழ்ந்து வரும் சக்தி மசாலா நிறுவனம் கொரோனா தடுப்பு பணிக்காக முதல்வரின் அழைப்பை ஏற்று 5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பிய நிறுவனம்: தங்களின் தலைமையில் அமைந்த அரசு தமிழகத்தில் வைரஸ் பரவாமல் தடுக்க எடுத்து வரும் சீரிய முயற்சிகளுக்கு சக்தி மசாலா நிறுவனங்களின் சார்பாக முதற்கண் எங்களது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.இந்த முயற்சிகளுக்கு உதவும் பொருட்டு எங்கள் சக்தி மசாலா நிறுவனத்தின் சார்பாக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 5 கோடி ரூபாய் அனுப்பியு உள்ளோம் என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.கொரோனா வைரஸ் பரவல் தடுப்புப் பணிகளில் நாங்களும் பங்கேற்க தாங்கள் வாய்ப்பு அளித்தமைக்கு மிக்க நன்றி என்று சக்தி மசாலா நிறுவனம் தெரிவித்துள்ளது.
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
கோவை : ஈஷா யோகா மையத்தில் இன்று (பிப்ரவரி 26, 2025) மஹா சிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : IQOO போன் என்றாலே கேம் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லலாம். விவோ நிறுவனத்துடன் இணைந்து இருக்கும்…
சென்னை : எங்கே பார்த்தாலும் டிராகன் படம் பார்த்தாச்சா? பார்த்தாச்சா என்கிற குரல் தான் கேட்டு கொண்டு இருக்கிறது. அந்த…
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
டெல்லி : கும்பமேளா நிகழ்வு என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய ஆறுகள் ஒன்றாக கூடும் திரிவேணி சங்கமத்தில் 12…