சீனாவில் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் எனப்படும் புதியவகை வைரஸ் காய்ச்சல் அங்கு பரவி வருகிறது. தற்போது அந்நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் போன்ற நகரங்களிலும் பரவியுள்ளது. இந்த கொரோனா வைரஸ் மற்ற நாடுகளில் பரவிவிடாமல் இருக்க அனைத்து நாடுகளிலும் உள்ள சர்வேதேச விமான நிலையங்களில் சீனாவில் இருந்து வரும் பயணிகளிடம் சோதனை செய்த பின்னரே தங்கள் நாடுகளில் அனுமதிக்கின்றனர். இதன் விளைவாக இந்தியாவில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பின்னர் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள், இந்திய விமான நிலையங்களில் கடுமையான மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னரே அவர்களை அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் சீனாவிலிருந்து கேரளா திரும்பிய மாணவிக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், சீனாவிலிருந்து சென்னை சர்வேதேச விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் 3 விதமாக பிரிக்கப்பட்டு அதற்கு ஏற்ப முன்னெச்சரிக்கை நடவெடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அதில் முன்னதாக கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட, சீனாவின் வுகான் நகரிலிருந்து வந்து சேருவோரிடம் உடனடியாக ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னையில் உள்ள கிங்ஸ் பரிசோதனை மையத்துக்கு அனுப்பப்படும். அவர்கள் 28 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள். நோய் பாதிப்பு அறிகுறிகள் தெரிந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுவார்கள். இதுவரை ரத்த மாதிரிகள் சோதனைக்காக புனேவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தற்போது கிங்ஸ் இன்ஸ்டிடியூட்டில் பரிசோதனை செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 10க்கும் மேற்பட்ட படுக்கைகளுடன் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் நெருக்கத்தில் உள்ள தாம்பரம் அரசு மருத்துவமனையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 242 பேர் சீனாவிலிருந்து தமிழகம் வந்துள்ளனர். அதில் அனைவரும் 28 நாட்கள் கண்காணிப்பில் இருக்கிறார்கள் என்றும், நோய் பாதிப்பு ஏற்பட்ட இடங்களிலிருந்து இனிமேல் வருபவர்களின் ரத்த பரிசோதனை கட்டாயமாக விமான நிலையங்களிலேயே எடுக்கப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் பரவி வருவதால் பொதுமக்கள் தற்போது பீதியில் உள்ளனர்.
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…